கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஒன்றாரியோ கிட்சனர் கொனெஸ்டோகா கல்லூரியில் ஏதிலி அந்தஸ்து கோரிய சர்வதேச மாணர்களின் எண்ணிக்கை 324 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் 106 மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரியதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பினால், தாய் நாட்டில் ஆபத்து ஏற்படக்கூடும் என கருதும் நபர்கள் ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்ய முடியும்.
வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக வெளிநாட்டு மாணவர்கள் இவ்வாறு ஏதிலி அந்தஸ்து கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் ஏதிலி அந்தஸ்து கோரும் மாணவர்கள்
குறிப்பாக வகுப்புக் கட்டணங்கள் மற்றும் வாடகைத் தொகை அதிகரிப்பு போன்றன வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கற்கை நெறிகளிலிருந்து விலகுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இதனால் மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரும் சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.