Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

Tamil Business Directory

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.

இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.

கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.