கனடாவில் பள்ளி மாணவர்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்கள் இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய வழிகாட்டுதல்கள் எதுவும் இன்றி இவ்வாறு தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் சில நேரங்களில் கற்றல் நடவடிக்கைகளில் மோசடிகளில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெனரேட்டிவ் ஏ ஐ தொழில்நுட்பங்களாக கருதப்படும் ChatGPT, Bard, DALL-E, Midjourney, மற்றும் DeepMind போன்ற தொழில்நுட்பங்கள் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் 18 வயதிற்கும் மேற்பட்ட 52 வீதமான மாணவர்கள் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு, கலை மற்றும் எழுத்தாக்கம் போன்ற துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழிற்பங்கள் பல்வேறு தகவல்களை வழங்கி வருகின்றன.
அந்த தொழில்நுட்ப உதவிகளை மாணவர்கள், உரிய ஒழுங்குபடுத்தலுக்கு அமைவாக அன்றி பயன்படுத்துவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாடசாலை ஒப்படைகள் பரீட்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இவ்வாறு மாணவர்கள் இந்த செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் முதல் நிலை வியாபார ஆலோசனையை நிறுவனமான KPMG நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வுகளின் மூலம் மாணவர்கள் அதிக அளவில் தற்பொழுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் அது ஒழுங்கு படுத்தப்பட வேண்டியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.