Reading Time: < 1 minute

கிரேஹவுண்ட் (GREYHOUND) பேருந்து சேவை நிறுவனமானது கனடாவில் அனைத்து பேருந்து வழித்தடங்களையும் நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பேருந்து சேவைகள் செயல்படாது என்றே கிரேஹவுண்ட் பேருந்து சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

வருவாய் இழப்பே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. ஒரு முழு ஆண்டும் வருவாய் ஏதுமின்றி முடங்க நேர்ந்ததை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முடிவு எங்கள் ஊழியர்கள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய தாக்கத்திற்காக மிகவும் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், எவரேனும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் அனைவருக்கும் ஜூன் மாத இறுதிக்குள் தொகை திருப்பி அளிக்கப்படும் என பேருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் மட்டுமே உள்ளூர் சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கிரேஹவுண்ட் பேருந்து சேவை நிறுவனம், அமெரிக்காவில் இருந்து செயல்படும் பேருந்து சேவைகள் வழக்கம் போல செயல்பாட்டில் இருக்கும் என்றே தெரிவித்துள்ளனர்.