Reading Time: < 1 minute

எதிர்வரும் குளிர்காலத்தில் ஈ-ஸ்கூடிகள் மற்றும் ஈ-பைக்குகள் என்பனவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கனடாவில் குளிர்கால மாதங்களில் லித்தியம் பேட்டரிகளை பயன்படுத்தி பயணம் செய்யும் ஈ-ஸ்கூடிகள் மற்றும் ஈ-பைக்குகளை தடை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

கனடிய போக்குவரத்து சேவை பணியாளர்கள் இந்த பரிந்துரையை விடுத்துள்ளனர்.

இந்த ஈஸ்கூட்டர்கள் மற்றும் ஈ-பைக்குகள் என்பனவற்றில் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் கனடிய போக்குவரத்து சேவைக்கு சொந்தமான இடங்களில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை கொண்டு செல்வதற்கு சார்ஜ் செய்வதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் மாதம் 15 திகதி குளிர்காலம் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.