Reading Time: < 1 minute

கனடாவில் நபர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உயிருடன் இருக்கும் நபர் ஒருவருக்கு, அவர் இறந்து விட்டதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மைக்கல் சகர்ஸ்க்வீ என்ற 67 வயதான நபர் இறந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் ஓராண்டுக்கு முன்னரே இறந்து விட்டதாக கனடிய அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஒன்றாரியோ பேர்த்தில் வாழ்ந்து வரும் நபரே இந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார்.

எதனால் குறித்த நபர் மரணித்து விட்டதாக தீர்மானித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இறந்த விட்டதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமது ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் போலந்து மற்றும் கனடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலந்து நாட்டிலிருந்து தமக்கு ஓய்வூதியம் கிடைக்கப் பெறுவதாகவும் கனடாவில் தாம் இறந்து விட்டதாக எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்த தவறு திருத்தப்படும் எனவும் கொடுப்பனவுகள் ரத்து செய்யப்படாது எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், என்ன காரணத்தினால் குறித்தந பர் உயிரிழந்தார் என அறிவிக்கட்டமைக்கு இதுவரையில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.