Reading Time: < 1 minute

கனடாவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு சுமார் 40 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதை பொருளை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

21 வயதான சுபெய்ர் மஹிடா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடிய எல்லை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின் போது பெருந்தொகை கஞ்சா போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருளின் சந்தை பெறுமதி சுமார் 120 ஆயிரம் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.

குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.