கனடாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நேரடியாக திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
ஜேர்மனி ஆட்சித் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவரை நேற்று கியூபெக் – மொன்றியலில் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போதே ட்ரூடோ இவ்வாறு தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் திறன்களை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய வலுசக்தி விநியோகத்திற்கு பங்களிக்க எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம் என்றும் ட்ரூடோ கூறினார்.
கனடா கிழக்கு கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு திரவ எரிவாறு உட்பட வலுசக்தி மூலங்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவோம்.
அத்துடன், கனடா மற்றும் ஜேர்மனியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இடையே பொருளாதார ஈடுபாடு தொடர்பான பேச்சு நடந்து வருகின்றன எனவும் கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார்.