கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை இயங்கி வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையிலான தபால் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனேடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பொதிகளில் ஆயுத உற்பத்திக்கான பொருட்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஆயுத உற்பத்தி மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு 30 வயதான விக்டர் ஜூலின் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முப்பரிமாண அச்சாக்கம் அல்லது 3D தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆயுத உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து ஆயுதங்கள், ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளிட்டனவற்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
இந்த முப்பரிமாண அச்சாக்க துப்பாக்கிகள் கனடாவில் பெரும் பிரச்சினையாக மாறி வருவதா பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படைகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.