Reading Time: < 1 minute

கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது.

இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று ட்ரூடோ வலியுறுத்தினார்.

கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புது டெல்லியின் கோரிக்கையை ஒட்டவா பலமுறை நிராகரித்துள்ளது.

இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே உள்ள இராஜதந்திர உறவுகள் இறுக்கமான நிலையில் உள்ள நிலையில் அண்மைய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.