Reading Time: < 1 minute

கனடாவில் சிலவகை ஸ்வட்டர்கள் மட்டும் ஹுடிகள் (sweaters and hoodies) என்பனவற்றை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல ஸ்வெட்டர் ஹுடிகள் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ஸ்வெட்டர்கள் மட்டும் ஹுடிகள் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 130000 ஸ்வெட்டர் வகைகள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. இந்த ஷட்டர் வகைகள் விரைவில் தீப்பற்ற கூடியவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுகாதார திணைக்களம் இந்த விசேட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த வகை ஸ்வெட்டர்கள் மட்டும் ஹுடிகள் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகை ஸ்வெட்டர் பயன்படுத்தும் நபர்கள் அவற்றை நிறுவனத்திடம் ஒப்படைத்து பணத்தை மீள பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்த ஆபத்து மிக்க ஸ்வெட்டர் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.