Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு வென்றெடுக்கப்பட்ட நான்கு லொத்தர் சீட்டுகள் இன்னமும் பணப்பரிசு பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றி இலக்கங்களை பரீட்சித்து பார்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ லொத்தர் சீட்டு மற்றும் கேமிங் திணைக்களம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

மேக்ஸ் மில்லியன் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

லொட்டொ மெக்‌ஸ் சீட்டிலுப்பில் 132000 டாலர் பணப் பரிசுத் தொகையும் கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் என் கோர் லொத்தர் சீட்டிலுப்பின் இரண்டு லொத்தர் சீட்டுகளின் தலா ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வெற்றிகள் இதுவரை உரிமை கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவா, பீல் மற்றும் வெல்லேண்ட் போன்ற பகுதிகளில் இந்த லொத்தர் சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றவர்கள் பரிசு இலக்கங்களை பரீட்சித்து அவற்றுக்கு உரிமை கோர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டு காலப்பகுதிக்குள் லொத்தர் சீட்டு பரிசு தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.