கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீசார் முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இந்த இரட்டை கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களின் பின்னணி குறித்து கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி வாக்குமூலம் ஒன்றை அடித்துள்ளார்.
தமது கணவர் கொடிய மனிதர் அல்ல எனவும் ஏமாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியே இந்த கொலைகளுக்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக தமது கணவர் ஏமாற்றப்பட்டு வந்ததாகவும் இதனால் மன அழுத்தமடைந்து இவ்வாறு படுகொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது குடும்பத்தினர் சேமித்து வைத்திருந்த பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவத்தில் 54 வயதான ஆராஷ் மிஸாகி, 44 வயதான சமீரா யூசுப்பி ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
மேலும், 46 வயதான எலன் கார்ட்ஸ் என்பவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
யாருடைய உயிரையும் பறிப்பதற்கு உரிமை அற்றவர்கள் என்ற போதும் மிகவும் மன விரக்தி காரணமாக இந்த தீர்மானத்தை அவர் எடுத்திருப்பதாக எலனின் மனைவி தெரிவித்துள்ளார்.
அடகு கடன் தொடர்பில் இடம்பெற்ற 1.28 மில்லியன் டொலர் மோசடி சம்பவத்தின் பாதிக்கப்பட்டவர்களில் எலனின் குடும்பமும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.