Reading Time: < 1 minute

கனடாவில் வாழ்ந்து வரும் ஆசிய கனடியர்கள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவுதகாவும், வெறுப்புணர்வு காட்டப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிலவிவரும் அரசியல் பதற்ற நிலைமைகள் மற்றும் கோவிட் பெருந்தொற்று நிலைமை ஆகிய காரணிகளினால் இவ்வாறு ஆசிய கனடியர்கள் மீது வெறுப்புணர்வு பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 2500 ஆசிய கனடியர்கள் மற்றும் ஏனைய கனடியகர்களை உள்ளடக்கியதாக இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிய கனடியர்கள் துன்புறுத்தல்களை எதிர் நோக்குவதாக கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஆசிய கணையர்கள் வெறுப்புணர்வு சம்பவங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சீனர்கள் அதிக அளவில் இவ்வாறான சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையா ஆண்டுகளாகவே சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு விரிசல் நிலைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஆசிய கனடியர்கள் கனடாவில் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனப் பிரஜைகளை இழிவுபடுத்துதல், தனிப்பட்ட ரீதியான அச்சுறுத்தல்கள், நண்பர்கள் சக ஊழியர்கள் தொடர்புகளை துண்டித்தல் ,உடல் ரீதியான தாக்குதல்கள் என பல்வேறு விதமான துன்புறுத்தல்களை சீன கனடியர்கள் அதிக அளவில் இந்த ஆண்டில் எதிர்நோக்க நேரிட்டுள்ளது என கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.