Reading Time: < 1 minute
கனடாவில் எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு கனடாவின் விண்ணிப்பிக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விண்ணிப்பிக்கில் அமைந்துள்ள ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் பிரான்ஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வானத்தில் திடீரென ஏற்பட்ட புகை மணம் காரணமாக விமானம் அவசரமாக திசை திருப்பப் பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்படவில்லை எதுவும் இந்த சம்பவத்தில் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.