கனடாவில், பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த இளைஞர் ஒருவர், அருவியில் நீந்தச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த நாக குமார் (Polukonda Lenin Naga Kumar, 23), ஒன்ராறியோவில் வசித்துவந்துள்ளார். அவர் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தற்காலிகமாக உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்துவந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று நாக குமார் தனது நண்பர்கள் சிலருடன் Silver Falls என்னும் அருவிக்குச் சென்றுள்ளார். நண்பர்கள் அருவியில் நீந்திக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, திடீரென நாக குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார். மற்றவர்கள் பத்திரமாக கரைக்குத் திரும்பிவிட்ட நிலையில், நாக குமாரால் நீந்தி கரைக்கு வரமுடியாமல் போயுள்ளது.
அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார். அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக காத்திருந்த நிலையில் நாக குமார் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.