Reading Time: < 1 minute

கனடாவில்அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் விசேட எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது.

கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் இந்த விலை அதிகரிப்பு கட்டுப்பாடு அமுலில் இருந்தது.

எனினும், தற்பொழுது அத்தியாவசியப் பொருள் விற்பனை நிறுவனங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.