Reading Time: < 1 minute

கனேடிய அரசாங்கத்தின் புதிய தரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது.

கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 15,300 பேர் இறப்பதில் மருத்துவ உதவி பெற்றதாகக் காட்டும் தரவுகளை புதன்கிழமை கனடாவின் சுகாதார பிரிவு வெளியிட்டது.

இது கனடாவில் கடந்த ஆண்டு பதிவான மொத்த இறப்புகளில் 4.7 சதவீதத்தை குறிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சராசரியாக 77 வயதுக்கும் அதிகமானவர்கள்.

அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் புற்றுநோய் போன்ற கடுமையான மருத்துவ நோயினால் பாதிக்கப்படவர்கள் ஆவர்.

பெரும்பான்மையானவர்கள் – சுமார் 96% – புற்றுநோய் போன்ற கடுமையான மருத்துவ நிலைமைகள் காரணமாக, “நியாயமாக எதிர்பார்க்கக்கூடியதாக” கருதப்பட்ட மரணம் இருந்தது.

கனேடிய சட்டமியற்றுபவர்கள் தற்போது 2027 ஆம் ஆண்டுக்குள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் கருணைக்கொலைக்கான அணுகலை விரிவுபடுத்த முயல்கின்றனர்.

கடந்த தசாப்தத்தில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெய்ன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கருணைக் கொலையை சட்டமாக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.

ஹெல்த் கனடாவால் புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், 2023 இல் கனடாவில் கருணைக் கொலையில் இறப்பவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 16% அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 31% அதிகரிப்பிலிருந்து கூர்மையான வீழ்ச்சியாகும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.