Reading Time: < 1 minute

கனடாவில் அடுத்த ஆண்டு வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் சராசரியாக 3.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மற்றும் மேற்கு கனடா பகுதிகளில் மிக அதிகளவில் வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் 10 முதல் 15 வீதம் வரையில் வீடுகளின் விலைகள் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிலும் கனடாவில் வீட்டு விலைகள் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2023ம் ஆண்டில் சுமார் 60 வீதமான வீட்டுச் சந்தை சமனிலையான அடிப்படையில் காணப்படும் என ரியல்எஸ்டேட் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் சில பகுதிகளில் மட்டும் பாரிய மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் சுமார் 12 வீதமளவில் வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்கரி, எட்மோன்டன், ஹாலிபிக்ஸ் போன்ற பகுதிகளில் வீட்டு விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.