கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன்.
அதுவே, 2024இல் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆக குறைந்துவிட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 19,821.
அதுவே, இந்த ஜனவரில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 11,840ஆக குறைந்துவிட்டது.
நாட்டில் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், கனடா அரசு வெளிப்படையாகவே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏமாற்றமளித்துவருவதுடன், வழங்கும் விசாக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவருகிறது.
அதன் விளைவாகவே கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.