கனடாவில் 83 வயதான மூதாட்டி ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் மாபெரும் பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளார்.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த மூதாட்டி 60 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார்.
கிழக்கு ஒன்றாரியோவின் வென்கிலிக்ஹில்லைச் சேர்ந்த வெரா பேஜ் என்ற 83 வயதான பெண்ணே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றெடுத்தமை குறித்து குடும்பத்தாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் அதனை நம்பவில்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார்.
மகனுக்கும், மருமகளுக்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றைய மருமகளிடம் தனது வெற்றி குறித்து கூறிய போது அவர் சிரித்து விட்டு, உறங்குமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகையைக் கொண்டு நல்லதொரு விடுமுறை பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், குடும்பத்தினருக்கு பணத்தை பகிர்ந்தளிக்க உள்ளதாகவும் பேஜ் தெரிவித்துள்ளார்.