Reading Time: < 1 minute
கனடாவின் முன்னணி கேளிக்கை பூங்காக்களில் ஒன்றான வொன்டர்லாண்ட்டில் அமந்துள்ள ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்த காரணத்தினால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.
பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு ஸ்தம்பித்த ரோலர் கோஸ்டரின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டன.
பாராமரிப்பு பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரோலர் கோஸ்டர் ஸ்தம்பித்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் வரையில் பயணிகள் அந்தரத்தில் தொங்கி, காத்திருக்கும் காட்சிகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.