கனடாவில் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஓர் சிறுவனை அவனது தாயும் பொலிஸாரும் தேடி வருகின்றனர்.
ஜெப்ரி டுபஸ் என்ற சிறுவன் 1980ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி காணாமல் போயுள்ளான். அல்பர்ட்டாவின் ஸ்லேவ் லேக் பகுதியில் டுபஸ் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வயதான சிறுவன், அயல் வீட்டுக்கு விளையாட சென்றிருந்த போது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 43 ஆண்டுகளாகவே பொலிஸார் இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற காலங்களில் இந்த காணாமல் போதல் சம்பவத்துடன் சிறுவனின் தாய்க்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி மக்கள் சிறுவனின் தாயை ஓர் கொலையாளி போன்று பார்த்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், சந்தேகக் கண் கொண்டு பார்த்தமைக்காக பொலிஸார் சிறுவனின் தாயிடம் அண்மையில் மன்னிப்பு கோரியுள்ளனர்.
மிக நீண்ட காலமாக குறித்த சிறுவனின் தாயை ஓர் சந்தேக நபராக பொலிஸார் நடாத்தியுள்ளனர், அண்மையில் சந்தேக நபர்கள் பட்டியலிலிருந்து குறித்த பெண்ணை நீக்கியுள்ளனர்.
43 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் தற்பொழுது எப்படி இருக்க கூடும் என்ற வகையிலான புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.