Reading Time: < 1 minute

கனடாவின் வின்னிப்பிக் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நான்கு பழங்குடியின பெண்களை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

35 வயதான ஜெமி அந்தோணி மைக்கேல் கிபிஸ்கி என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டிருந்த பழங்குடியின பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட போது இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் 16ஆம் தேதி 24 வயதான ரபேக்கா கொன்டிஸ் என்ற பழங்குடியின பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தா.

இந்தப் பெண்ணின் மரணத்துடன் மைக்கேலுக்கு தொடர்பு உண்டு என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

விசாரணைகளின் போது இந்த நபர் மேலும் பலரை படுகொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

தொடர்கொலையாளி என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் அதற்கு பெப்ரவரி, மாதங்களில் மாதங்களில் மேலும் பெண்களை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கொலை குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முழு வீச்சில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.