Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நான்கு ஆண்டுகள் போலியாக தாதியாக கடமையாற்றிய பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த பெண், தம்மை தாதியாக அடையாளப்படுத்தி வேலை செய்துள்ளார்.

சிம்கோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதான ஹாய்லி ரொபர்ட்ஸ் என்ற பெண் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் டைனி டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் பல்வேறு சுகாதார நிறுவனங்களில் தாதியாக கடமையாக்கியுள்ளார்.

இந்தப் பெண் போலி ஆவணங்களை பயன்படுத்தி பணியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.