Reading Time: < 1 minute

கனடாவில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்கினால் இரண்டரை லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபராக குறித்த குற்றவாளி அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

லிட்டில் இத்தாலி என்னும் பகுதியின் ◌ஹோட்டல் ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராபிப் அலாகில் Rabih Alkhalil என்ற நபரை இவ்வாறு போலீசாரினால் தேடப்பட்டு வருகின்றார்.

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் 25 குற்றவாளிகள் பற்றிய விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் அலாகில் என்ற குற்றவாளி பற்றிய தகவல்களை வழங்கும் நபருக்கு 250000 டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை லட்சம் டாலர் என்பது ஒரு பாரிய தொகை எனவும் குறித்த நபர் பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடம் தங்கள் பெயர் என்பனவற்றை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தகவல்களை மட்டும் வழங்கினால் அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரை கைது செய்த உடன் இந்த சன்மானத்தை வழங்குவதாகவும் வேறு எந்த நிபந்தனைகளும் சன்மானம் வழங்க கிடையாது எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த சன்மானத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள செல்லுபடியாகும் காலமானது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வரையில் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலாகில் கடந்த ஜூலை மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய சிறைச்சாலையில் இருந்து சினிமா பாணியில் தப்பி சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.