Reading Time: < 1 minute
கனடாவின் ஒன்றாரியோவில் லொத்தர் சீட்டிலுப்பில், 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுத்த அதிர்ஸ்டசாலி யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை.
ஜாக்பொட் பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்ட இந்த லொத்தர் சீட்டு நோர்த் யோர்க்கின் விலோவ்டேல் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றவர்கள் ஓராண்டுக்குள் பணப்பரிசிற்கு உரிமை கோரி, பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.