கனடா அரசு, இதற்கு முன் இருந்தது தவிர்த்து, மேலும் 16 புதிய வகை பணிகள் செய்வோர் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு தகுதி பெறுவதாக அறிவித்துள்ள விடயம் பலதரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கனடாவில், மருத்துவத்துறை, கட்டுமானத்துறை, போக்குவரத்து முதலான துறைகளில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து திறமையுடைய பணியாளர்களை கனடாவுக்குக் கொண்டு வரும் வகையில், மேலும் 16 வகை பணியாளர்களை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு தகுதி பெறுவதாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
அதன்படி, இனி எக்ஸ்பிரஸ் நுழைவு வாயிலாக விண்ணப்பிக்க, செவிலியர் உதவியாளர்கள், மருத்துவமனை உதவியாளர்கள், ஆசிரியர்களுக்கு உதவும் உதவியாளர்கள், போக்குவரத்து ட்ரக் சாரதிகள் முதலான பணியாளர்கள் அடங்குவர்.
இது குறித்து பேசிய கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சரான Sean Fraser, இந்த மாற்றங்கள், இந்த குறிப்பிட்ட துறைகளில் தேவையிலிருக்கும் கனேடியர்களுக்கு உதவியாக இருக்கும். அத்துடன், இத்தகைய பணி செய்வோரால் நமது பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டு ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கு அது வழிவகை செய்யும் என்றார்.
புதிதாக நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற தகுதியுடையவர்கள் யார் யார்?
கீழ்க்கண்ட, முன் அனுபவம் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் இனி எக்ஸ்பிரஸ் நுழைவு வாயிலாக நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
- Dental assistants and dental laboratory assistants
- Nurse aides, orderlies and patient service associates
- Pharmacy technical assistants and pharmacy assistants
- Elementary and secondary school teacher assistants
- Sheriffs and Bailiffs 6. Correctional service officers
- By-law enforcement and other regulatory officers
- Estheticians, electrologists and related occupations
- Residential and commercial installers and servicers
- Pest controllers and fumigators
- Other repairers and servicers
- Transport truck drivers
- Bus drivers, subway operators and other transit operators
- Heavy equipment operators
- Aircraft assemblers
- Aircraft assembly inspectors
தகுதியுடையோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.