கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஏர் கனடா விமானம், திங்கட்கிழமை, கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
மதியம் 12 மணியளவில், அந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக Newark லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும். யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் அந்த விமானத்தை சோதனையிட்டபின், அந்த விமானத்தில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், விமான நிலைய பணிகள் மீண்டும் துவங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். என்றாலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.