Reading Time: < 1 minute

கனடா அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலர் அவசர உதவியை அழைக்கவேண்டிய நிலை உருவானது.

நேற்று அதிகாலை 4.00 மணியளவில், கனடா அமெரிக்க எல்லையிலிருந்து சிலர் அவசர உதவியை அழைத்துள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையமுயன்றவர்கள் ஆவர்.

உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினருடன் அமெரிக்க பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

தாங்கள் கடுங்குளிர் காரணமாக ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் அவசர உதவிய அழைத்துள்ளனர்.

அந்த கூட்டத்தில் பத்து பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேரை அமெரிக்க பொலிசார் கைது செய்துள்ளனர், ஒருவரைக் காணவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபக்கத்தில், கனடா பொலிசார் காணாமல் போன அந்த நபரைத் தேடிவருகிறார்கள். கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையமுயன்ற அந்த புலம்பெயர்வோர், எந்த நாட்டவர்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.