கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த இரண்டு பேர், அமெரிக்க அரசாங்கத்திடம் பாரியளவில் நிதி மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவில் வசித்து வந்த இரண்டு பேர் இவ்வாறு 2.4 மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர்.
சாய்கிரு ஓலான்ரிவாஜூ அம்பாலி மற்றும் பாய்ட்டு இஸ்மாய்லா லாவெல் ஆகிய இரண்டு பேர் இவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர்.
அமெரிக்க தொழிலாளர்களது தகவல்களை களவாடி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவுகை ஏற்பட்ட காலத்தில், தொழில்களை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நலன்புரி கொடுப்பனவு மோசடி செய்யப்பட்டுள்ளன.
போலியான அடிப்படையில் பலரது பெயரில் இந்த நபர்கள்; நலன்புரி கொடுப்பனவு பெற்றுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் 25 மாநிலங்களிலும் 13 கூகுள் கணக்குகளை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க பணியாளர்கள் நலன்புரி கொடுப்பனவிற்கு விண்ணப்பம் செய்வது போன்று இந்த நபர்கள் வி;ண்ணப்பித்து அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர்.
ரொறன்ரோவில் வாழ்ந்து வந்த இருவரும் நைஜீரிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.