கனடாவில் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் மிகச் சிறிய செய்மதி ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக அத்லாந்திக் கனடிய பகுதியிலிருந்து ஓர் செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறிய செய்மதியின் எடை 3.2 கிலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது. நானோ சாட்டிலைட் என்ற வகையைச் சேர்ந்த இந்த செய்மதிக்கு லொரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
கனேடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவுவதற்கு ஓர் செய்மதி உருவாக்குவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல எனவும் இதற்காக பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்கள் மிகவும் சிறந்ததாக அமைய வேண்டும் எனவும் கனடிய விண்வெளி ஆய்வு முகவர் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த செய்மதியானது பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் சஞ்சரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்மதியானது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமியை வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.