Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 111 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட 188 வெளியேற்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வெளியேற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதியில் நிகழ்ந்துள்ளன.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவில் வசிக்கத் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து, விசாரித்து, வெளியேற்ற கனடா முழுவதிலும் உள்ள சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் ஆகஸ்ட் 2025-இல் பசிபிக் மற்றும் பிரெய்ரி பிராந்தியங்களில் தொடங்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் டொராண்டோ பகுதிக்கு விரிவாக்கப்பட்டது.

பசிபிக் பிராந்தியத்தில் 91 வெளியேற்ற உத்தரவுகள் – 58 பேர் நாடுகடத்தல், பிரெய்ரி பிராந்தியம் 47 வெளியேற்ற உத்தரவுகள் – 30 பேர் நாடுகடத்தல், கிரேட்டர் தொரண்டோ பகுதி 50 வெளியேற்ற உத்தரவுகள் – 23 பேர் நாடுகடத்தல் என விபரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் தீவிர குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கொண்ட 1,010 பேர் உட்பட மொத்தம் 23,160 தகுதியற்ற நபர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

தற்போது எல்லை முகமையகத்தை விரிவாக்கம் செய்ய 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30.4 மில்லியன் டொலர் நிதி மூலம் மேலும் 1,000 புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.