கனடாவிற்கு தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக சில ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டுள்ளது என புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார்.
குடிரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இவ்வாறு காத்திருக்க நேரிட்டுள்ளமைக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோவை மாரியா பெர்னாண்டா மெக்ஸில் பிளாடாஸ் என்ற பெண்ணே இவ்வாறு காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வயது முதிர்ந்த பெற்றோரை கனடாவிற்கு அழைத்து வருவதற்காக எடுத்து வரும் முயற்சிள் கைகூடாமல் இருப்து குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தனது பெற்றோருக்கு தாம் ஒரே பிள்ளை எனவும் தாமே அவர்களை பராமரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோருடன் இணைந்து வாழ்ந்தால் தமது புற்று நோய் நிலைமைகளிலும் நல்ல மாறுதலை எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மெக்ஸில் கடந்த 2010ம் ஆண்டில் மொன்றியாலுக்கு குடியேறியதுடன் 2018ம் ஆண்டில் அவருக்கு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் பெற்றோருக்கு அனுசரணை வழங்கி அவர்களை கனடாவிற்கு அழைத்து வர முயற்சி எடுத்து வந்த போதிலும் அவை பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.