Reading Time: < 1 minute

கனடாவிற்கு அனுப்பும் தபால்களை தற்காலிக அடிப்படையில் ஏற்பதில்லை என அமெரிக்க தபால் சேவை தீர்மானித்துள்ளது.

கனடாவிற்கு முகவரி இடப்பட்ட தபால்களை அனுப்புவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு கனடிய தபால் அமெரிக்க தபால் சேவை அறிவித்துள்ளது.

அமெரிக்க தபால் சேவை இது தொடர்பில் அறிவித்துள்ளது.

கனடிய தபால் சேவை பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 55 ஆயிரம் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.