கனடாவின் முன்னாள் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ரன்சம் வேர் ஹேக்கிங் (ransomware hacker ) குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால் இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த செபஸ்டியன் வாசோன் டெஸ்ஜார்டின்ஸ் (Sébastien Vachon-Desjardins) என்பவருக்கு இவ்வாறு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
கனடாவின் அரசாங்க நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக செபஸ்டியன் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செபஸ்டியனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.
கணினி மோசடி அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட கணனி கட்டமைப்பை சேதமாக்கியமை, ஹாக் செய்தமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் செபஸ்டின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் இந்த செபஸ்டியன் மற்றும் ஒரு குழுவினர் அமெரிக்காவில் கணணிகளை ஹேக் செய்து கப்பம் பெற்றுக்கொண்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிறுவன கணணி கட்டமைப்புகளுக்குள் உட்புகுந்து தகவல்களை திருடி அவற்றை மீள வழங்குவதற்காக இவ்வாறு கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
40 நாடுகளில் சுமார் 400 பேரிடம் இந்த கும்பல் 40 மில்லியன் டாலர்களை கர்ப்பமாக பெற்றுக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலுக்கு ஆயுள் தண்டனை விதித்து இருக்க வேண்டும் எனவும், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட காரணத்தினால் தான் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் வழக்கினை விசாரணை செய்த அமெரிக்க நீதிபதி தெரிவித்துள்ளார்.