கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 41% சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் ஜூன் மாதத்தில் சுமார் 6,474 வீடுகள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இதே மாதம் கடந்த ஆண்டில் மொத்தம் 11,053 வீடுகள் விற்பனையாகியுள்ளது.
மே மாதத்தை ஒப்பிடுகையிலும் கூட ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாகவே கூறப்படுகிறது. கனடாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு காணப்படுகிறது.
சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கனடாவில் விலைவாசி உயர்வானது 7.7% என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், உயரும் வட்டி மற்றும் அடமான விகிதங்களும் மக்கள் வீடு வாங்குவதை தள்ளிப்போடுவதற்கு முதன்மை காரணிகளாக பார்க்கப்படுகிறது.
ரொறன்ரோ பகுதியில் சராசரி வீட்டு விலை கடந்த மாதம் $1,146,254 ஆக உயர்ந்துள்ளது, இது ஜூன் 2021ல் இருந்து தோராயமாக ஐந்து சதவீதம் அதிகமாகும். ஆனால் ஜூன் மாத சராசரி விலை என்பது மே 2022ல் இருந்து கிட்டத்தட்ட ஆறு சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.