Reading Time: < 1 minute

கனடாவின் மளிகைக் கடைகளில் அதிகளவில் களவுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கம் மற்றும் ஊழியப்படை பற்றாக்குறை போன்ற ஏதுக்களினால் இவ்வாறு இவ்வாறு களவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாதம் அதற்கு முன்னைய ஆண்டு ஒக்ரோபர் மாதத்தை விடவும் உணவுப் பொருள் விலை 11 வீதமாக உயர்வடைந்துள்ளது.

பணவிக்கம் காரணமாக உணவுப் பொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவானவர்கள் களவாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மேலும் மந்த கதியடைந்தால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பிற்கும் களவுச் சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும் நேரடித் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.