கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டபின், மீண்டும் கனடாவுடன் தொடர்புடைய தலைவர் ஒருவரை நேருக்கு நேர் சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார்.
கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள Mary Simon மற்றும் அவரது கணவரான Mr Whit Fraser இருவரையும் சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார்.
கொரோனாவிலிருந்து விடுபட்டபின் காணொளி வாயிலாகவே சந்திப்புகளை மேற்கொண்டு வந்த மகாராணியார், திங்கட்கிழமை நடந்த காமன்வெல்த் நினைவு ஆராதனையில் கூட நேரடியாக பங்கேற்கவில்லை. அவர் காணொளிக் காட்சி மூலம்தான் அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்நிலையில்தான், விண்ட்சர் மாளிகையிலுள்ள Oak Room என்னும் பிரபலமான அறையில் அவர் Mary Simonக்கும் அவரது கணவருக்கும் தேநீர் விருந்து அளித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணியார் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதும், அவர் நேருக்கு நேர் சந்தித்த முதல் உலகத் தலைவர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான்!
தனது தந்தை கனடா பிரதமராக இருந்ததால், ஒரு சிறுவனாக இருந்தபோதே அடிக்கடி பிரித்தானிய மகாராணியாரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவர் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.