கனடாவின் பாதுகாப்புச் செலவுகள் உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவுகளுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் நாடுகள் இவ்வாறு பாதுகாப்புச் செலவில் இரண்டு வீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நேட்டோவில் அங்கம் வகிக்கும் கனடா இதுவரையில் இவ்வாறான ஒரு தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டில் பாதுகாப்பு செலவுகளுக்காக மொத்த தேசிய உற்பத்தியில் இரண்டு வீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பாதுகாப்பு செலவினங்களுக்காக இவ்வாறு இரண்டு வீதம் ஒதுக்கீடு செய்வதானது மொத்தமாக 60 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நடைமுறை சாத்தியப்பாடு உடைய வகையில் இந்த செலவீனங்கள் திட்டமிட்டு அமல்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.