கனடாவின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காஸா பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு நாட்டின் பல நகரங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஸா பிராந்திய வலயத்தில் போர் நிறுத்தம் அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அரேபிய நேச நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவின அநேக நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ரொறன்ரோ, மொன்றியால், ஒட்டாவா, பிரிட்ரிக்சன் உள்ளிட்ட பல முக்கியமான நகரங்களில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீன இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினால் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காஸா பிராந்திய வலயத்தில் உடன் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கு தடையினற்p நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.