கனடாவின் சில பகுதிகளில நாய்களினால் தொல்லை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவின் கிராமிய பகுதிகளில் இவ்வாறு தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
க்ரீ பெஸ்ட் நேசன், ஜேம்ஸ் பே, சவுத்தர்லேன்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்களினால் அதிகளவு தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹுஸ்கிஸ், லெப்ராடோஸ், ஜெர்மன் செப்பர்ட் உள்ளிட்ட சில வகை நாய்கள் இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கிராமிய பகுதிகளில் நாய்களின் தொல்லை வெகுவாக அதிகரித்துள்ளது. நாய்களின் தொகை அதிகரிப்பானது நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின சிறார்கள் பாடசாலை செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நாய்களினால் இடையூறு விளைவிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.