Reading Time: < 1 minute

கனடாவில் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மொத்த சனத்தொகை 41,288,599 மாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் காலாண்டு பகுதியில் நாட்டின் சனத்தொகை 250,229ல் அதிகரித்துள்ளது.

இரண்டாம் காலாண்டு பகுதியில் சனத்தொகை அதிகரிப்பு 0.6 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியில் சனத்தொகை வளர்ச்சியானது 0.8 வீதமாக அதிகரித்திருந்தது.

நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புக்களுக்கு இடையிலான வித்தியாசம் 9926 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வேகமாக சனத்தொகை வளர்ச்சி பதிவான மாகாணமாக அல்பர்ட்டா காணப்படுகின்றது