Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, சனிக்கிழமை காலை கோர்ட்லண்ட் அவென்யூ மற்றும் ஹேவர்ட் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

எனினும், பொலிஸார் அங்கு சென்றபோது காயமடைந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சூழ்நிலை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.