கனடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெள்லைத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேற சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது.
அதில் இருவர் உயிரிழந்த நிலையில் காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர். அதே போன்ற சூழ்நிலையில் காணாமல் போன 52 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவருடன் இருந்த இளையரைக் காணவில்லை. அதேவேளை நோவா ஸ்கோஷியாவில் 3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை கடந்த வாரத்தில் சில மணி நேரத்துக்குள் கொட்டித்தீர்த்ததை அடுத்து வாகனங்கள், பாலங்கள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.
தற்போது வெள்ள நீர் வடியத் தொடங்கியியுள்ள போதும் சில இடங்களில் வெள்ளம் நீடிக்கிறதாக நோவா ஸ்கோஷியா அதிகாரிகள் கூறுகின்றனர்.