Reading Time: < 1 minute
கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் கனடாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வந்த மகிந்தன் தயாபரராஜா (35) கடந்த 13ஆம் திகதி மேல்மருவத்தூருக்கு தாய் லீலாவதி மற்றும் சகோதிரியுடன் வந்துள்ளார்.
அப்போது மகிந்தன் திடீரென காணாமல் போன நிலையில், ஆத்தூர் சாலையோரத்தில் மயங்கிக் கிடந்ததாக சிலர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி மகிந்தன் உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்து உறவினர்கள் அவரது உடலை மீட்டு கனடா கொண்டு சென்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் வரை மகிந்தன் எதற்காக சென்றார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மகிந்தன் பணத்திற்காக கடத்தபட்டிருந்தாரா என்பதும் தெரியவரவில்லை. விசாரணை முடிவில் இது தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.