Reading Time: < 1 minute

கனடாவின் வால்போல் தீவு ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், ‘ரிவர் ரோட்’ பகுதியில் பயணித்த வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகே உள்ள ‘செயின்ட் கிளேர்’ ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து அவசரக்கால மீட்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஆற்றுக்குள் மூழ்கிய வாகனத்தில் இருந்து வால்போல் தீவைச் சேர்ந்த 84 வயது முதியவரை மீட்டனர்.

இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த தகவல்கள் அல்லது ‘டாஷ் கேம்’ காணொளிப் பதிவுகள் வைத்திருப்பவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணில் ஒன்டாரியோ மாகாண பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.