Reading Time: < 1 minute

கனடா முழுவதும் எரிபொருள் விலை உச்சம் கண்டு வரும் நிலையில் இந்த வாரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தேசிய சராசரி எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை சுமார் $2.06 என அதிகரித்து, முந்தைய நாளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று சென்ட்கள் உயர்ந்ததுடன் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 11 சென்ட்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் எரிபொருள் விலை மீண்டும் மீண்டும் ஆட்டம் கண்டு வருவதை கண்காணித்து வருவதாக Dan McTeague தெரிவித்துள்ளார்.

வான்கூவரில் வார இறுதியில் ஒரு லிற்றருக்கு கிட்டத்தட்ட $2.37 விலையை எட்டியது, அதே நேரத்தில் மாண்ட்ரீல் பகுதியில் லிற்றருக்கு $2.24 என்ற விலையில் விற்பனையாகியுள்ளது.

செயின்ட் ஜான்ஸில் லிற்றருக்கு $2.23 என விற்கப்பட்ட நிலையில் ரொறன்ரோவில் ஒரு லிற்றர் வழக்கமான அன்லெடட் பெட்ரோலுக்கு $2.15 வசூலிக்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் 3 cents வரையில் லிற்றர் ஒன்றுக்கு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், திங்கட்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் சராசரி எரிபொருள் விலை லிற்றருக்கு $2.12 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.