சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் (20) பதவியேற்றார்.
பதவியேற்றது முதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதி எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். சீனா மீதான கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை வரும் பெப்ரவரி முதலாம் திகதி டிரம்ப் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த அறிவிப்பும் வரும் பெப்ரவரி முதலாம் திகதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.