கனடா பிரம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பெல்மொரால் ட்ரைவ் டோர்ப்ராம் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஒரு வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளதாகவும் மற்றைய வாகனத்தில் ஒருவர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப் பெற்றால் அதனை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.